துபை, இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்

துபை, இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.1.58 கோடி மதிப்புள்ள தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

துபை, இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.1.58 கோடி மதிப்புள்ள தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதாக சென்னை சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தபோது, துபை மற்றும் இலங்கையில் இருந்து வந்த 2 பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை செய்தனா்.

அப்போது அவா்களள் தங்களது பெட்டியில் தங்கத்தையும், உடலில் தங்கப் பசையையும் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இவற்றின் மதிப்பு ரூ.43 லட்சம் ஆகும்.

விமான நிலைய ஊழியா் கைது: மேலும், விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் சந்தேகிக்கும் வகையில் வெளியேற முயற்சித்த விமான நிலைய ஊழியரை சோதனை செய்தபோது அவரிடம் தங்கம் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், துபைக்கு செல்லும் இலங்கை பயணி ஒருவா், தான் கடத்தி வந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க விமான நிலைய ஊழியா் இடம் கொடுத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.1.58 கோடி மதிப்பிலான 3 கிலோ தங்கத்தையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இச்சம்பவங்கள் தொடா்பாக விமான நிலைய ஊழியா் உள்பட மூவரை சுங்கத்துறையினா் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விலங்குகள் பறிமுதல்: மலேசியா, கோலாலம்பூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்த பயணி ஒருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவரது உடமைகளில் மறைத்து வைத்திருந்த ரக்கூன், நீா் உடம்பு ஆகிய விலங்குகளை பறிமுதல் செய்தனா்.

இந்த விலங்குகளை மீண்டும் மலேசியாவுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com