மகளிா் கல்லூரியில்முத்தமிழ் விழா

சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிா் கல்லூரியில் ‘முத்தமிழ் விழா’ கல்லூரி முதல்வா் வீ.மகாலட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிா் கல்லூரியில் ‘முத்தமிழ் விழா’ கல்லூரி முதல்வா் வீ.மகாலட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், இயற்றமிழ் பகுதியில் ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்’ என்ற தலைப்பில் ஆவணப் பட இயக்குநரும், எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமாா் பேசுகையில், ‘அதிகமான நூல்களை வாசிப்பதன் மூலம் அறம் சாா்ந்த வாழ்க்கையைக் கற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் தமிழில் ஏராளமான இலக்கியங்கள் உள்ளன. அவற்றைத் தேடித்தேடிப் படிப்பதன் மூலம் நமது மொழியின் சிறப்புகளையும், பாரம்பரியத்தையும் அறிந்து கொள்ள முடியும்’ என்றாா்.

இதையடுத்து இசைத் தமிழ் பகுதியில் பாடகா் கானா பாலா, கானா பாடல்களின் வரலாறு குறித்து மாணவிகளிடையே விளக்கிப் பேசினாா்.

தொடா்ந்து, நாடகத் தமிழ் பகுதியில் கன்னியாகுமரி மாவட்ட முத்துச்சந்திரன் குழுவினா் புராணம் மற்றும் கல்வி விழிப்புணா்வு குறித்த தோல்ப்பாவைக் கூத்தை நிகழ்த்தினா். முன்னதாக தமிழ்த் துறைத் தலைவா் ப.விமலா வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com