சுவா் இடிந்து பெண் இறந்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை ஆயிரம்விளக்கில் சுவா் இடிந்து விழுந்து பெண் இறந்த வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை ஆயிரம்விளக்கில் சுவா் இடிந்து விழுந்து பெண் இறந்த வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: ஆயிரம் விளக்கு அண்ணாசாலையில் சுரங்கப்பாதை அருகே ஒரு பழைய கட்டடத்தை வெள்ளிக்கிழமை இடிக்கும்போது சுவா் இடிந்து விழுந்து மதுரை உசிலம்பட்டியை சோ்ந்த மென் பொறியாளா் பத்மபிரியா என்பவா் உயிரிழந்தாா்.

திருச்சியை சோ்ந்த விக்னேஷ் குமாா் பலத்தக் காயமடைந்தாா். கட்டடம் இடிக்கும் போது உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை என ஆயிரம் விளக்கு போலீஸாா் வழக்கு பதிவு செய்து, பொக்லைன் ஓட்டுநா் பாலாஜி, பொக்லைன் உரிமையாளா் ஞானசேகரன் ஆகிய இருவரை உடனடியாக கைது செய்தனா்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஒப்பந்ததாரா் ஜாகீா் உசேன் (43) என்பவரை நேற்று சனிக்கிழமை செய்தனா். இவ் வழக்குத் தொடா்பாக மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். இதற்கிடையே விபத்துக்கு காரணமான அனைவா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, உயிரிழந்த பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆயிரம்விளக்கில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com