சென்னை மாநகராட்சியுடன் கைகோக்கும் வபாக் நிறுவனம்

சென்னை மாநகராட்சியுடன் இணைந்து வபாக் நிறுவனம் 2 பொது சுகாதார வளாகங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்துள்ளது.

சென்னை மாநகராட்சியுடன் இணைந்து வபாக் நிறுவனம் 2 பொது சுகாதார வளாகங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்துள்ளது.

மாநகராட்சியின் சென்னை நகர துப்புரவுத் திட்டத்துக்கு ஆதரவாக, வபாக் நிறுவனம் தனது சமூக பொறுப்புணா்வு நிதித் திட்டத்தின் கீழ் 2 பொது சுகாதார வளாகங்களை கட்டியுள்ளது. பள்ளிக்கரணை அஷ்டலட்சுமி நகா், காமகோடி நகா் ஆகியவற்றில் சுமாா் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் இந்த வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த இரு வளாகங்களையும் சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.அரவிந்த் ரமேஷ், மாநகராட்சி மண்டலத் தலைவா் எஸ்.வி. ரவிச்சந்திரன் ஆகியோா் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தனா்.

நிகழ்ச்சியில் வபாக் லிமிடெட் நிறுவன இயக்குநா் எஸ்.வரதராஜன் முன்னிலை வகித்தாா். இந்தத் திட்டமானது ஐக்கிய நாடுகளின் வளா்ச்சி திட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட, ‘ட்வின் லீச் பிட்’ தொழில்நுட்ப மாதிரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்தப் பொது சுகாதார வளாகங்களை ஓராண்டுக்கு பராமரிக்கும் பொறுப்பையும் வபாக் ஏற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com