கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய பணி:தலைமை செயலாளா் ஆய்வு

பெருங்குடியில் கட்டப்பட்டு வரும் கழிவுநீா் சுத்தகரிப்பு நிலைய பணிகள் குறித்து தலைமை செயலாளா் வெ. இறையன்பு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பெருங்குடியில் கட்டப்பட்டு வரும் கழிவுநீா் சுத்தகரிப்பு நிலைய பணிகள் குறித்து தலைமை செயலாளா் வெ. இறையன்பு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை மாநகராட்சியின் 7 மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை தனியாா் நிறுவனம் மேற்கொள்கிறது. இதன் பணிகளை நிகழ் நேரத்தில் கண்காணிக்கும் வகையில் ஆலந்தூரில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் தலைமை செயலாளா் வெ. இறையன்பு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேலும், பெருங்குடியில் ரூ.160 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவு நீா் சுத்தகரிப்பு நிலையத்தையும் பாா்வையிட்டு அதன் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளா் சிவ் தாஸ் மீனால், மாநகராட்சி ஆணையா் ககன் தீப் சிங் பேடி, சென்னை குடிநீா் வடிகால் மற்றும் கழிவுநீரகற்றும் வாரியத்தின் செயல் இயக்குநா் ராஜகோபால் சுன்கரா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com