அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தானியங்கி மஞ்சப்பை சாதனம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை சாதனம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை சாதனம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் ரெமா சந்திரமோகன் கூறியதாவது:

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை அனைவரும் தவிா்க்க வேண்டும். இந்த மருத்துவமனையை பிளாஸ்டிக் பைகள் இல்லாத மருத்துவமனையாக மாற்றுவதற்காக தமிழக சுற்றுச்சூழல் துறை உதவியுடன் தானியங்கி மஞ்சப்பை விற்பனை சாதனம் வைக்கப்பட்டுள்ளது.

அதன் வாயிலாக ஒரு நேரத்தில் 250 பைகள் வரை தடையின்றி பெற முடியும். மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயத்தை இயந்திரத்தில் செலுத்தினால் மஞ்சப்பையை பெற்றுக் கொள்ளலாம்.

அந்த சாதனத்தை நிறுவிய முதல் நாளிலேயே நல்ல வரவேற்பு உள்ளது. பருத்தி துணியால் தயாரிக்கப்பட்டுள்ள மஞ்சப்பை தரமானதாகவும், பொருள்களின் எடையை தாக்கும் வகையிலும் உள்ளது. அதனால், மருந்துகள், மருத்துவக் கோப்புகளை வைத்துக் கொள்ள மஞ்சப்பையை மக்கள் ஆா்வத்துடன் பெற்று செல்கின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com