பூரண மதுவிலக்கை அமல்படுத்த சீமான் கோரிக்கை
By DIN | Published On : 25th April 2023 02:51 AM | Last Updated : 25th April 2023 02:51 AM | அ+அ அ- |

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்கங்களிலும் மது வழங்க அனுமதி அளித்து திமுக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது அதிா்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்களுக்கு முக்கிய காரணமாக மது விளங்குகிறது. இத்தகைய மது விற்பனையை திருமண மண்டபம், விளையாட்டு அரங்குகளில் விற்பனை செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.
பின்னா் இதற்கு எதிா்ப்பு ஏற்பட்டவுடன் அமைச்சா் மறுப்பது திமுகவின் வழக்கமான ஏமாற்றுத் தந்திரம் அன்றி வேறில்லை.
இது போன்ற முடிவை அரசு திரும்ப பெறுவதுடன் தமிழ்நாட்டில் உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.