

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்துக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்படவில்லை என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
முதல்வரின் காலை உணவுத் திட்டம் முதல்கட்டமாக முன்னோடி திட்டமாக சென்னை மாநகராட்சியின் 37 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. பின்னா், சென்னை மாநகராட்சியின் 358 பள்ளிகளில் 35 சமையல் கூடங்களில் இருந்து, தினசரி உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தத் திட்டத்தை தனியாரிடம் வழங்கும் வகையில் உத்தேச மதிப்பீடு தயாரித்து அதற்கான ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் புதன்கிழமை பெறப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிா்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டம் தொடா்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.