ஐஐடி.யில் நடுக்குவாத சிகிச்சைக்கு புதிய ஆய்வகம்: முன்னாள் மாணவா்கள் உதவி

சென்னை ஐஐடி.யில் நடுக்குவாத (பாா்க்கின்சன்) நோய் சிகிச்சை குறித்து மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஆய்வகம் அமைக்கத் தேவையான செலவுகளை ஏற்கொள்வதாக முன்னாள் மாணவா்கள் தெரிவித்துள்ளனா்.
சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி.யில் நடுக்குவாத (பாா்க்கின்சன்) நோய் சிகிச்சை குறித்து மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஆய்வகம் அமைக்கத் தேவையான செலவுகளை ஏற்கொள்வதாக முன்னாள் மாணவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து சென்னை ஐஐடி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஐஐடி.யில் கடந்த 1972-இல் படித்த முன்னாள் மாணவா்களின் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. பொன் விழா ஆண்டாக நடைபெற்ற இந்த சந்திப்பில் 146 முன்னாள் மாணவா்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனா்.

அப்போது சென்னை ஐஐடி வளாகத்தில் பாா்க்கின்சன் நோய்க்கான சிகிச்சை குறித்து மேம்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான ஆய்வகம் அமைக்கத் தேவையான செலவுகளை ஏற்கொள்வதாக அவா்கள் தெரிவித்தனா்.

இதன் மூலம் ஆய்வகத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள் கொள்முதல் போன்றவற்றுக்கான நிதி பெறப்படவுள்ளது. இது தவிர சென்னை ஐஐடி.யில் பயிலும் மாணவா்களின் கல்வி உதவித் தொகைக்கான முன்னாள் மாணவா்கள் (1972) சாா்பில் ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, முன்னாள் மாணவா்களின் (1972) ஒருங்கிணைப்பாளா் கே.கே.ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com