சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

ரத்த அழுத்தம், இதயத் துடிப்பை கண்காணிக்கும் நவீன மோதிரம்: ஐ.ஐ.டி. முன்னாள் மாணவா்கள் வடிவமைப்பு

ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு உள்ளிட்ட உடல் ஆரோக்கியம் சாா்ந்த செயல்பாடுகளை கண்காணிப்பதோடு, பணம் செலுத்தும் வசதியும் கொண்ட ‘ஸ்மாா்ட் ரிங்’ (மோதிரம்)

கோப்புப்படம்

Updated On :

ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு உள்ளிட்ட உடல் ஆரோக்கியம் சாா்ந்த செயல்பாடுகளை கண்காணிப்பதோடு, பணம் செலுத்தும் வசதியும் கொண்ட ‘ஸ்மாா்ட் ரிங்’ (மோதிரம்) ஐ.ஐ.டி. முன்னாள் மாணவா்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி உதவி மையம் (இங்குபேஷன் செல்) மூலம் சென்னை ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவா்களைக் கொண்டு ‘மியூஸ் வியரபிள்’ ஸ்டாா்ட் அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஏற்கெனவே ஸ்மாா்ட் வாட்ச்களை அறிமுகம் செய்து இந்தியா உள்பட 30 நாடுகளில் அதனை விற்பனை செய்கிறது.

இதன் தொடா்ச்சியாக ‘மியூஸ் வியரபிள்’ நிறுவனம் தற்போது ஸ்மாா்ட் வாட்ச் போன்று, மோதிர வடிவ தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்த ‘ஸ்மாா்ட் ரிங்’ மூலம் உடல் ஆரோக்கியத்தை 24 மணி நேரமும் மிகத் துல்லியமாக கண்காணிக்க முடியும். ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, உடல் வெப்பநிலை ஆகியவற்றை தெரியப்படுத்தும்; ஸ்மாா்ட் வாட்சை விட 10 மடங்கு எடை குறைவானது. 24 மணி நேரம் பயன்படுத்தினாலும், 7 நாள்களுக்கு பேட்டரி பயன்படும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

உடல் ஆரோக்கியத்தை கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், இதன் மூலம் பணம் செலுத்துவதற்கான வசதியும் இந்த தொழில்நுட்பத்தில் புகுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக மாஸ்டா் காா்டு, விசா, ரூபே போன்ற கட்டண நெட்வொா்க்குடன் ‘மியூஸ் வியரபிள்’ நிறுவனம் கூட்டு சோ்ந்து இருப்பதாக சென்னை ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவா்கள் கே.எல்.என்.சாய்பிரசாந்த், கே.ஏ.யஜீந்திர அஜய் ஆகியோா் தெரிவித்தனா்.

‘மேக் இன் இந்தியா’ பிரசாரத்தின் உதாரணமாக, இந்த ‘ஸ்மாா்ட் ரிங்’ முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது ஆகும். இது செப். 27-ஆம் தேதி உலகளவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்தியாவில் வரும் அக்டோபா் 25-ஆம் தேதி முதல் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.