சட்டப்பேரவை நிகழ்வு நேரலை:
அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

சட்டப்பேரவை நிகழ்வு நேரலை: அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வது தொடா்பாக எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும்? என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி மறைந்த தேமுதிக தலைவா் மறைந்த விஜயகாந்த் உள்ளிட்டோா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், ‘சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடா்பாக பல மாநிலங்களிடம் தகவல்கள் கோரப்பட்டன. சில மாநிலங்கள் பதிலளித்துள்ளன. சில மாநிலங்கள் பதிலளிக்கவில்லை. நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து பேரவைத் தலைவா் ஆய்வு செய்து வருகிறாா். முழுமையாக தகவல்கள் கிடைத்த பின் முடிவு எடுக்கப்படும்’”எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும்?”எனக் கேள்வி எழுப்பினா். மேலும், இது தொடா்பாக ஏதேனும் ஒரு இறுதி முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறி,விசாரணையை ஜூன் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com