பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

பெங்களூரு: பிரபல கன்னட நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான துவாரகேஷ் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் காலமானார்.

கன்னட திரையுலகின் புகழ்பெற்ற நடிகர், இயக்குநர், தயாரிப்பாளருமான துவாரகேஷ் (81), செவ்வாய்க்கிழமை காலை எழுந்து தேனீர் அருந்திவிட்டு சோர்வாக உள்ளதாக கூறி மீண்டும் உறங்கினார். காலை 9 மணிக்கு அவரது மகன், எழுப்ப முயன்றபோது அவர் எழுந்திருக்கவில்லை. அவரைச் சோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

நடிகர் துவாரகேஷின் மறைவுக்கு முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர், எச்.டி.குமாரசாமி, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தனது 20}ஆவது வயதில் திரையுலகில் கால்பதித்த அவர் 90க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 50க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்து, இயக்கி இருக்கிறார்.

1969ஆம் ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமாரை வைத்து அவர் தயாரித்த "மேயர் முத்தண்ணா' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

பெங்களூரில் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு கன்னட திரைப்படக் கலைஞர்கள் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ரவீந்திர கலாúக்ஷத்ராவில் நடிகர் துவாரகேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக புதன்கிழமை வைக்கப்படுகிறது. அதன் பிறகு அன்று மாலை உடல் தகனம் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com