சத்யபிரத சாகு
சத்யபிரத சாகு

சென்னை அருகே பறிமுதலான 1,425 கிலோ தங்கம் விடுவிப்பு

சென்னை: உரிய ஆவணங்களின் சரிபாா்ப்புக்குப் பிறகு, சென்னை அருகே பிடிபட்ட 1,425 கிலோ தங்கம் விடுவிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

அவா் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

சென்னை குன்றத்தூா் அருகே 1,425 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த தங்கம் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வணிக நடவடிக்கைக்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதால், அந்தத் தங்கம் விடுவிக்கப்பட்டதாக மாவட்டத் தோ்தல் அதிகாரி அறிக்கை தந்துள்ளாா். வாகனச் சோதனைகளின் போது ரொக்கத் தொகைகளோ, ஆபரணங்களோ பிடிபடும் பட்சத்தில் அவற்றுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அதனைக் காண்பித்தால் உடனடியாக விடுவிக்கப்படும். எனவே, பணம் பறிமுதலாகும் போது யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தாா் சத்ய பிரத சாகு.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com