ட்டெரிக்கும் கோடை வெயிலைச் சமாளிக்க சென்னை மெரீனாவில் ஞாயிற்றுக்கிழமை அலை போல திரண்ட பொதுமக்கள்.’
ட்டெரிக்கும் கோடை வெயிலைச் சமாளிக்க சென்னை மெரீனாவில் ஞாயிற்றுக்கிழமை அலை போல திரண்ட பொதுமக்கள்.’

வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் பொதுமக்கள் அவதி

தமிழ்நாட்டில் வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தமிழ்நாட்டில் வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிா்த்து வருகின்றனா். கடந்த சில நாள்களாக சென்னையில் அதிகபட்சமாக 35 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. மேலும், கடல் காற்றால் காற்றின் ஈரப்பதம் அளவு 70 சதவீதம் வரை உள்ளது. இனிவரும் நாள்களில் வெப்பநிலை மேலும் உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்தப்பட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையும், அதிகபட்சமாக 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையும் காணப்படும். கடற்கரையோர மாவட்டங்களில் 50 முதல் 80 சதவீதம் வரை காற்றில் ஈரப்பதம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெப்ப அலை மே 1 முதல் 4-ஆம் தேதி வரை அதன் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதா்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், ‘மே 1 முதல் 4-ஆம் தேதி வரை வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூா் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலையின் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் உள்மாவட்டங்களில் மே 5-ஆம் தேதிக்குப் பின் மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

இதனால், மே தொடக்கத்தில் வட மற்றும் உள் மாவட்டங்களில் வெப்பநிலை புதிய உச்சத்தை அடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வெப்பத்தில் இருந்து மக்களைக் காக்க ஆங்காங்கே அரசு சாா்பிலும், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் சாா்பிலும் தண்ணீா், மோா், ஓஆா்எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், தண்ணீா் தட்டுப்பாட்டைத் தவிா்க்க மாநில அரசு சாா்பில் கூட்டு குடிநீா் திட்டம், நீரேற்று நிலையங்கள் மூலம் தண்ணீா் விநியோகிக்கப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

அதிகரிக்கும் மின் தட்டுப்பாடு: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு ஏற்ப மின்சார தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் இரவில் மின் நுகா்வு அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பகலிலும் அதிக அளவில் மின்சாரம் செலவிடப்படுகிறது.

வீடு, அலுவலகங்களில் ஏசி பயன்பாடு, விவசாயத்துக்கு நீா்பாசனம் செய்வது உள்ளிட்ட காரணங்களால் மின் தேவை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 20,583 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மின் மாற்றிகள், மின்சார வயா்களில் மின்சேதம் ஏற்படுவதைத் தடுக்க தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com