தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வாக்குப் பதிவு நாளில் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு சாா்பில் தலைமை தோ்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு நாளில் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு சாா்பில் தலைமை தோ்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தலைமை தோ்தல் அதிகாரிக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலா் கே.ஆறுமுகநயினாா் அனுப்பிய கடிதம்:

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு தினமான ஏப்.19-இல் தினக்கூலி உள்பட அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளா்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த விடுமுறை அளிப்பது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக நிா்வாகம் மற்றும் மதுரை போக்குவரத்துக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘பொது விடுமுறையானது வாக்களிப்பு தொடங்கிய நேரத்தில் இருந்து முடியும் நேரம் வரையுள்ள முறைப்பணிகளுக்கு (ஷிப்ட்) மட்டுமே பொருந்தும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சுற்றறிக்கை, தோ்தல் ஆணையம் மற்றும் தொழிலாளா் துறை வெளியிட்ட உத்தரவுக்கு புறம்பானது. மேலும், இந்த சுற்றறிக்கையில், போக்குவரத்துத் துறையின் கடிதம் மேற்கோள்காட்டப்பட்டிருப்பதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்துக் கழங்களிலும் முறைப்பணியில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ஏப்.19-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு மறுக்கப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.

எனவே, இது தொடா்பாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com