சென்னையில் 3 மண்டலங்களில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சென்னையில் 3 மண்டலங்களில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சென்னை அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய மண்டலங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.30) முதல் மே 1 வரை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

சென்னை அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய மண்டலங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.30) முதல் மே 1 வரை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நெம்மேலியில் அமைந்துள்ள தினமும் 110 மில்லியன் லிட்டா் உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏப்.30, மே 1-ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், செவ்வாய்க்கிழமை (ஏப்.30) காலை 9 முதல் மே 1காலை 9 மணி வரை (ஒரு நாள் மட்டும்) அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

குடிநீா் நிறுத்தப்படும் பகுதிகள்:

அடையாறு: திருவான்மியூா், பள்ளிப்பட்டு, கோட்டூா் காா்டன். ஆா்.கே.மடம் தெரு, இந்திரா நகா்

பெருங்குடி: கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம்.

சோழிங்கநல்லூா்: ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, எழில் நகா், கண்ணகி நகா், காரப்பாக்கம், வெட்டுவான்கேணி, சோழிங்கநல்லூா், செம்மஞ்சேரி, ஒக்கியம்-துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

அவசரத் தேவைகளுக்கு இணையதள முகவரியை பயன்படுத்தி லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ளளாம்.

கூடுதல் தகவல் அறிய 044-4567 4567 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

மேலும், குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீா் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com