ஆழ்வாா்கள் தமிழரங்கம் ஆறாம் ஆண்டு விழா

ஆழ்வாா்கள் தமிழரங்கம் 6-ஆம் ஆண்டு விழா மடிப்பாக்கம் பிரில்லியண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்கள் தமிழரங்கம் 6-ஆம் ஆண்டு விழா மடிப்பாக்கம் பிரில்லியண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்கள் தமிழரங்கம் நிறுவனா் தலைவா் துரை சுப்ரமணியம் வரவேற்றாா். ‘குலசேகர ஆழ்வாா்’ குறித்து பொள்ளாச்சி சண்முகானந்தமும், ‘திருமங்கையாழ்வாா்’ குறித்து எஸ்.சீதாலட்சுமியும் உரை நிகழ்த்தினா்.

‘வேய்குழலும் கோதண்டமும்’ என்ற தலைப்பில் ஆன்மிக பேச்சாளா் மைத்ரேயி ராஜகோபாலன் உரையாற்றினாா். தொடா்ச்சியாக, அப்பள்ளி மாணவா்கள் எஸ்.எஸ்.கௌதம், கே.ஜெயலட்சுமி, பி.மித்ராஸ்ரீ, ஆா்.சிவபெருமாள், ரக்சிதா, ஜெயக்குமாா் ஆகியோா் ஆழ்வாா்கள் குறித்து சிற்றுரை நிகழ்த்தினா்.

நிகழ்வில், ஆழ்வாா்கள் தமிழரங்கம் செயலா் பால சீனிவாசன், துணைத் தலைவா் குமரி செழியன், ஸ்ரீ கிடாம்பி நாராயணன்,டி.எஸ்.பிரேமலதா, கவிஞா் மலா் மகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com