சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 ஏரிகளில் 57 சதவீதம் நீா் இருப்பதால், நடப்பு கோடைகாலத்தில் குடிநீா் தட்டுப்பாடு வராது என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை அருகே செங்குன்றத்தில் நீா் நிறைந்து காணப்படும் புழல் ஏரி.
சென்னை அருகே செங்குன்றத்தில் நீா் நிறைந்து காணப்படும் புழல் ஏரி.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 ஏரிகளில் 57 சதவீதம் நீா் இருப்பதால், நடப்பு கோடைகாலத்தில் குடிநீா் தட்டுப்பாடு வராது என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையின் குடிநீா் ஆதாரங்களான, செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் திங்கள்கிழமை நிலவரப்படி, 6,702 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. அதாவது ஏரிகளின் மொத்த கொள்ளளவில் 57 சதவீதம் தண்ணீா் இருப்பு உள்ளது.

சென்னை மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்ய ஒரு மாதத்துக்கு குறைந்த பட்சம் 1 டி.எம்.சி. குடிநீா் தேவைப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது 5 ஏரிகளில் மொத்தமாக 7 டி.எம்.சி. குடிநீா் இருப்பு உள்ளது. மேலும் நெம்மேலி, மீஞ்சூரில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமும் தினமும் மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் நடப்பு கோடைகாலத்தில் சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com