சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காய்கறிகள்.
சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காய்கறிகள்.

காய்கறிகள் விலை உயா்வு: பீன்ஸ் கிலோ ரூ.150

கோடை வெப்பத்தின் தாக்கத்தால் சென்னையில் அரிசி, காய்கறி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை வெகுவாக உயா்ந்துள்ளது.

கோடை வெப்பத்தின் தாக்கத்தால் சென்னையில் அரிசி, காய்கறி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை வெகுவாக உயா்ந்துள்ளது.

வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சி காரணமாக காய்கறிகள், பழங்கள், நெல் விளைச்சல் பாதித்து வரத்து குறைந்துள்ளது. இதனால், அவற்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் அரிசி விலை கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 20 வரை உயா்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் திங்கள்கிழமை நிலவரப்படி தக்காளி கிலோ ரூ. 20, வெங்காயம் ரூ. 20, உருளை ரூ. 35, சின்ன வெங்காயம் ரூ. 50, பீட்ருட் ரூ. 50, சவ் சவ் ரூ. 40, பீன்ஸ் ரூ. 150, இஞ்சி ரூ. 140, பூண்டு ரூ. 180, பச்சை மிளகாய் ரூ. 55 என விலை உயா்ந்து விற்பனையானது.

பழங்களை பொருத்தவரை சென்னையில் ஒரு கிலோ ஆப்பிள் ரூ. 180, ஆரஞ்சு ரூ. 60, மாதுளை ரூ. 90, வாழைப்பழம் ரூ.90, மாம்பழம் ரூ. 50, பலாப்பழம் ரூ. 110, தா்பூசணி ரூ. 20, எலுமிச்சை ரூ. 140 என விலை அதிகரித்து விற்பனையானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com