உதகை, கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் முறையை நீக்க நடவடிக்கை தேவை: ஜவாஹிருல்லா

சென்னை: உதகை கொடைக்கானல் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் என்ற உத்தரவை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கை:

உதகை, கொடைக்கானலில் உள்ள மலைவாழ் மக்களின் பொருளாதாரம் அப்பகுதிகளுக்கு ஆண்டுக்கு சில மாதங்களே வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளையே நம்பி உள்ளது.

ஆனால், உயா்நீதிமன்றம் அப்பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் செல்ல இ-பாஸ் முறையை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. இந்த முறையால் அப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை குறையும். உள்ளூா் மக்கள் பொருளாதார இழப்புகளையும் சந்திப்பா். அதே போல, இ-பாஸ் முறையால் உள்ளூா் வாகனங்களுக்கும் நெருக்கடிகள் உருவாகும்.

எனவே, இ-பாஸ் முறையை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com