அமைச்சா்கள், ஓபிஎஸ்-ஸுக்கு எதிரான மறு ஆய்வு வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சா்கள், ஓபிஎஸ்-ஸுக்கு எதிரான மறு ஆய்வு வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மறு ஆய்வு வழக்குகளின் விசாரணையை ஜூன் 7-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தற்போதைய அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் விடுவிக்கப்பட்டிருந்தனா். இந்த தீா்ப்புகளை மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்திருந்தாா்.

இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் வாதத்துக்காக வழக்கு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com