இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

சென்னை: மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்த கட்டணம் மே 1}ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருவொற்றியூர், தேரடி, காலடிப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர்நீதிமன்றம், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி., நந்தனம், கிண்டி, ஆலந்தூர், நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், விமான நிலையம், அசோக் நகர், திருமங்கலம், எழும்பூர் என 18 மெட்ரோ ரயில் நிலையங்களில், ரயில்களில் பயணம் மேற்கொள்ளாமல் வாகன நிறுத்த வசதியை மட்டும் பயன்படுத்தும் நபர்களுக்கு வாகன நிறுத்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 30 நாள்களில் மெட்ரோ ரயில்களில் குறைந்தது 15 பயணங்கள் செய்த பணிகளுக்கு மாதாந்திர பாஸ் வழங்கும் வசதி விம்கோ நகர் பணிமணை, ஸ்ரீ தியாகராய கல்லூரி, நேரு பூங்கா, கோயம்பேடு, அசோக் நகர், ஆலந்தூர் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் நீட்டிக்கப்படுகிறது.

மேலும் கடந்த 30 நாள்களில் 15}க்கும் குறைவான பயணம் செய்தவர்களுக்கு அரும்பாக்கம் மற்றும் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர வாகன நிறுத்தக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், புது வண்ணாரப்பேட்டை, நந்தனம், எழும்பூர், செனாய் நகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்த இட வசதி இல்லாத காரணத்தால் மாதாந்திர பாஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.பொதுமக்கள் கட்டணம் பற்றிய விவரங்களை அறிய https://Chennaimetrorail.org/parking-tariff என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி கொள்ளவும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com