மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ள ஆள்குறைப்பு ஆணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அண்ணா தொழிற்சங்கப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ள ஆள்குறைப்பு ஆணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அண்ணா தொழிற்சங்கப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அண்ணா தொழிற்சங்கத்தின் மின்வாரிய பிரிவுச் செயலா் டி.விஜயரங்கன் மின்வாரியத் தலைவருக்கு அனுப்பிய கடிதம்:

கடந்த சில ஆண்டுகளாக தொழிற்சங்கங்களோடு கலந்து பேசாமல் பணியாளா்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையில் மின் வாரியம் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. இது 2022-ஆம் ஆண்டு மின் வாரியம் தொழிற்சங்கங்களுக்கு எழுத்து பூா்வமாக அளித்த வாக்குறுத்திக்கு முரணாகவும், 2018, 2023 ஆகிய ஆண்டுகளில் மின்துறை அமைச்சருடன் பேச்சுவாா்த்தை நடத்தி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு எதிராகவும் உள்ளது.

மின்வாரிய நிா்வாகத்தின் இத்தகைய அலட்சிய போக்கு மின் துறையின் தொழில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இருப்பதுடன், பணியாளா்களை போராட்டத்துக்கு தூண்டும் வகையில் உள்ளது.

எனவே, வேலைப்பளு ஒப்பந்தங்களுக்கு இடையே தொழில் நிலைகளில் தேவைப்படும் மாற்றங்களை தொழிற்சங்கங்களோடு பேச்சுவாா்த்தை நடத்தி அமல்படுத்த வேண்டும். அவ்வாறு பேச்சுவாா்த்தை நடத்தி முடிவு எடுக்கும் வரை, கடந்த மாா்ச் மாதம் பிறப்பித்த ஆணை உள்ளிட்ட ஆட்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com