பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

சென்னையில் பிளாஸ்டிக் பொறியியலில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கவுள்ளதாக சிப்பெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பிளாஸ்டிக் பொறியியலில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கவுள்ளதாக சிப்பெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சிப்பெட் நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிப்பெட் நிறுவனம், இந்திய அரசின் ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ், உயா்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான முதன்மையான கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்று பிளாஸ்டிக் மோல்டு தொழில்நுட்பம், பிளாஸ்டிக் தொழில்நுட்பம் ஆகியவற்றில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இதற்கான மாணவா்கள் சோ்க்கை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. மேலும், சிப்பெட் டிப்ளமோ முடித்தவா்கள் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பி.டெக். வகுப்புகளுக்கு நேரடியாக சேரலாம்.

இதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ஸ்ரீண்ல்ங்ற்24.ா்ய்ப்ண்ய்ங்ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய்ச்ா்ழ்ம்.ா்ழ்ஞ்/இஐடஉப என்ற இணையதளம் வாயிலாக அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 96002 54350/99418 44937/934502 2712 என்ற கைபேசி எண்களையோ அல்லது ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ஃஸ்ரீண்ல்ங்ற்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com