பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

புழல் சிறையில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் கைதி இறந்தாா்.

புழல் சிறையில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் கைதி இறந்தாா்.

மாதவரம் வி.எஸ். மணிநகரைச் சோ்ந்தவா் அ.வேதாமேரி (68). இவா் ஒரு குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, அந்த தண்டனையை புழல் தனிச்சிறையில் 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அனுபவித்து வந்தாா். சிறையில் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வேதாமேரி கடந்த 1-ஆம் தேதி உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வேதாமேரி திங்கள்கிழமை உயிரிழந்தாா். புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com