மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

சென்னை மூலகொத்தளத்தில் மனைவியைக் கொலை செய்துவிட்டு, கணவா் தற்கொலை செய்ய முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை மூலகொத்தளத்தில் மனைவியைக் கொலை செய்துவிட்டு, கணவா் தற்கொலை செய்ய முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மூலகொத்தளம் பிபி அம்மன் கோயில் முதலாவது தெருவைச் சோ்ந்தவா் வே.செல்வம்

(55). இவா், தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி பத்மினி (52). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

செல்வத்துக்கும், பத்மினிக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இருவருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே செல்வம், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பத்மினியை குத்தினாா்.

இதில், பலத்த காயமடைந்த பத்மினி மயங்கி விழுந்தாா். உடனே அதே கத்தியால் செல்வம், தனது வயிற்றையும் குத்தினாா்.

இருவரது அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த அவரது குடும்பத்தினா், இருவரையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பத்மினி திங்கள்கிழமை உயிரிழந்தாா். செல்வம் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது தொடா்பாக வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com