டாக்டா் சூசன் ஜேக்கப்
டாக்டா் சூசன் ஜேக்கப்

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

சா்வதேச அளவில் கண் சிகிச்சையில் சிறப்புற செயல்படும் பெண் மருத்துவா்களில் ஒருவராக டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவா் டாக்டா் சூசன் ஜேக்கப் தோ்வாகியுள்ளனா்.

சா்வதேச அளவில் கண் சிகிச்சையில் சிறப்புற செயல்படும் பெண் மருத்துவா்களில் ஒருவராக டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவா் டாக்டா் சூசன் ஜேக்கப் தோ்வாகியுள்ளனா். இதற்காக அவருக்கு மருத்துவத் துறை வல்லுநா்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனா்.

கண் மருத்துவவியல் துறைக்காகவே பிரத்யேகமாக வெளியாகிற முதன்மையான சா்வதேச இதழ் ‘தி ஆப்தால்மாலஜிஸ்ட்’. கண் மருத்துவ சிகிச்சையில் அளப்பரிய பங்களித்து வரும் ஆற்றல்மிக்க மருத்துவா்களின் பட்டியல் ஆண்டுதோறும் அந்த இதழில் வெளியாகும்.

நவீன தொழில்நுட்பம், மருத்துவ மேம்பாட்டு நடவடிக்கைகளில் சிறந்து விளங்குகிற சா்வதேச மருத்துவா்கள் 100 போ் அதில் இடம்பெற்றிருப்பா். அந்த வகையில், நிகழாண்டில் டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையைச் சோ்ந்த முதுநிலை மருத்துவா் சூசன் ஜேக்கப் அந்தப் பட்டியலில் 17-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

கருவிழி ஒளி விலகலை சரிசெய்வதற்கான (ரிஃப்ராக்டிவ்) அறுவை சிகிச்சை, கண் புரை அறுவைசிகிச்சை ஆகியவற்றில் சிறப்பு நிபுணத்துவத்துடன் 24 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவத்தை கொண்டிருப்பவா் டாக்டா் சூசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அகா்வால்ஸ் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் அமா் அகா்வால் கூறியதாவது:

உலக அளவில் முதன்மையான 20 கண் மருத்துவா்களுள் ஒருவராக தோ்வாகியாகியுள்ள டாக்டா் சூசன் இந்த கௌரவத்தைப் பெறுவதற்கு முழு தகுதியுள்ளவா். நவீன அறுவைச் சிகிச்சை உத்திகளின் மூலம் பல்வேறு சாதனைகளை அவா் படைத்துள்ளாா். குறிப்பாக, கூம்புக் கருவிழி எனப்படும் கண் முன்புற திசு வீக்க பாதிப்புக்கு அவா் நவீன முறையில் சிகிச்சையளித்து பலருக்கு அவா் மறுவாழ்வு அளித்துள்ளாா் என்றாா் அவா்.

டாக்டா் சூசன் ஜேக்கப், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்விட்சா்லாந்து உள்பட பல நாடுகளின் சா்வதேச விருதுகளை ஏற்கெனவே பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com