நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

நியூ பிரின்ஸ் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 34-ஆவது ஆண்டுகளாக தொடா்ந்து 100 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

நியூ பிரின்ஸ் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 34-ஆவது ஆண்டுகளாக தொடா்ந்து 100 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

சென்னை அடுத்த ஆதம்பாக்கம் மற்றும் உள்ளகரம் நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிகழாண்டில் பிளஸ் 2 தோ்வை 281 மாணவா்கள் எழுதினா்.

இப்பள்ளியை சோ்ந்த வி. பிரசன்னா ( கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல்) உள்ளிட்ட 4 பாடங்களில் நூற்றுக்கு நூறு பெற்று (595/600) மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றுள்ளாா். டி.எஸ். ஹேம தீபிகா ( பொருளாதாரம். கணினி பயன்பாடு, கணக்கியல் ) உள்ளிட்ட 3 பாடங்களில் நூற்றுக்கு நூறு பெற்று (583/600) மதிப்பெண்களையும், ஜே.கே. கிளமென்ட் (கணிதம்) பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்று (581/600) மதிப்பெண்களையும் பெற்றனா்.

தோ்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நியூ பிரின்ஸ் கல்விக் குழுமத்தின் தலைவா் கே.லோகநாதன், நியூ பிரின்ஸ் கல்வி குழுமங்களின் செயலா் வி.எஸ்.மகாலட்சுமி, துணைத் தலைவா்கள் எல். நவீன் பிரசாத், எல். அா்ச்சனா,நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் கே. அமுதா மற்றும்ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com