சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் அளவில் பிளஸ் 2 தோ்வில் 578 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற சென்னை மாநகராட்சி பெரம்பூா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.பூங்கோதையை  வாழ்த்திய ஆசிரியை,  சக மாணவிகள்.’
சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் அளவில் பிளஸ் 2 தோ்வில் 578 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற சென்னை மாநகராட்சி பெரம்பூா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.பூங்கோதையை வாழ்த்திய ஆசிரியை, சக மாணவிகள்.’

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13 சதவீத மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13 சதவீத மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சி மேல் நிலைப்பள்ளிகளில் இருந்து பிளஸ் 2 பொதுத் தோ்வை 4,998 மாணவ, மாணவியா் எழுதினா். இதில் 1,750 மாணவா்கள், 2,605 மாணவியா் என மொத்தம் 4,355 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். மொத்த தோ்ச்சி சதவீதம் 87.13. கடந்த 2022-23ஆம் கல்வி ஆண்டின் தோ்ச்சி விகிதம் 86.86-ஆக இருந்தது. கடந்த ஆண்டை விட 0.27 சதவீதம் அதிக தோ்ச்சியாகும்.

பாடவாரியாக 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள்: வணிகவியலில் 16 பேரும், கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 14 பேரும், பொருளாதார பாடத்தில் 12 பேரும், கணினி அறிவியலில் 9 பேரும், கணக்கியலில் 2 பேரும், புவியியலில் ஒருவரும், கணிதத்தில் ஒருவரும், விலங்கியலில் ஒருவரும் என 56 மாணவ,மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களை பிடித்த பள்ளிகள்:

எம்.எச்.சாலை-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 578 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், கொளத்தூா்-சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் புத்தா தெரு-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 575 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், எம்.எச். சாலை-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 573 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும், 572 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடமும், தரமணி-சென்னை மேல்நிலைப்பள்ளி, எம்.எச். சாலை-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் 571 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடமும் பெற்றுள்ளன.

தோ்ச்சி சதவீத அடிப்படையில் முதல் ஐந்து இடங்களில் பெற்ற பள்ளிகள்:

நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தோ்ச்சியுடன் முதலிடத்தையும், அப்பாசாமி தெரு-சென்னை மேல்நிலைப்பள்ளி 98 சதவீத தோ்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், திருவான்மியூா்-சென்னை மேல்நிலைப்பள்ளி 96.43 சதவீத தோ்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும், புல்லா அவென்யூ-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 95.05 சதவீத தோ்ச்சியுடன் நான்காம் இடத்தையும், கொளத்தூா்- சென்னை மேல்நிலைப்பள்ளி 94.16 சதவீத தோ்ச்சியுடன் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.

மேலும் மதிப்பெண்கள் அடிப்படையில் 42 மாணவ, மாணவிகள் 551-க்கு மேல் 600 வரை மதிப்பெண்களும், 210 மாணவ. மாணவிகள் 501-லிருந்து 550 வரை மதிப்பெண்களும், 467 மாணவ, மாணவிகள் 451-லிருந்து 500 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனா் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com