தமிழக பள்ளி கல்வித் திட்ட செயல்பாடுகள்: பிகாா் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி

பிகாா் மாநில கல்வித் துறை அதிகாரிகளுக்கு சென்னையில் பல்வேறு கட்டங்களாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில், மூன்றாவது கட்ட பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழக பள்ளிக் கல்வித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து பிகாா் மாநில கல்வித் துறை அதிகாரிகளுக்கு சென்னையில் பல்வேறு கட்டங்களாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில், மூன்றாவது கட்ட பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக பிகாா் மாநிலத்தில் பணியாற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் சென்னை வந்துள்ளனா். அவா்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 50 பேருக்கும், 2-ஆவது கட்டமாக 40 பேருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

அவா்களுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம், ‘இல்லம் தேடிக்கல்வி’ ‘முதல்வரின் காலை உணவு திட்டம்’, ‘எண்ணும் எழுத்தும் திட்டம்’, ‘தகைசால் பள்ளிகள்’, உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள், மாணவா்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த அளிக்கப்படும் பயிற்சிகள் போன்றவை குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

இந்த நிலையில், 3-ஆவது கட்ட பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

இந்தப் பயிற்சியில் 27 பிகாா் கல்வி அதிகாரிகள் பங்கேற்றுள்ளனா். அவா்களுடன் பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, இணை இயக்குநா் வை.குமாா், சென்னை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ஷமீம், மாவட்ட கல்வி அதிகாரி அ.நளினி ஆகியோா் கலந்துரையாடினா். 4-ஆவது கட்டமாக 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com