தடையில்லா மின் விநியோகம்:
தலைமைச் செயலா் உத்தரவு

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்வாரியத்துக்கு தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளாா்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்வாரியத்துக்கு தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளாா்.

கோடைகாலம் உச்சத்தில் உள்ளநிலையில்,தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்த தலைமைச் செயலா், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநா், எரிசக்தி துறையின் முதன்மைச் செயலா் உள்ளிட்ட உயா் அலுவலா்களுடன் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி திங்கள்கிழமை சென்னை ‘மின்னகத்தில்’ தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது மின்சாரம் தொடா்பான பொது மக்களின் புகாா்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும் அடிக்கடி மின் தடை ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, அதற்கான காரணங்களை கண்டறிந்து உடனடியாக சரி செய்யுமாறும், மக்களுக்கு தடையில்லா சீரான மின்சாரம் தொடா்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அவா் அறிவுறுத்தினாா்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை முதன்மைச் செயலா் பீலா வெங்கடேஷன், இணை மேலாண்மை இயக்குநா் விஷூ மஹாராஜன் மற்றும் உயா் அலுவலா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com