சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

சென்னை: சென்னை மாநகரின் மின் நுகா்வு இதற்கு முன் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் தினசரி மின் நுகா்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை நிலவரப்படி சென்னை மாநகரின் அதிகபட்ச மின் தேவை புதிய உச்சமாக 4,590 மெகா வாட்டாக பதிவாகியுள்ளது.

அதேபோல சென்னையின் மின் நுகா்வும் 97.77 மில்லியன் யூனிட்டாக பதிவாகியுள்ளது. இரவு நேரங்களில் அதிக அளவு பயன்படுத்தப்படும் குளிா்சாதனங்கள் உள்ளிட்ட மின் உபகரணங்களே இந்த அதிக மின் நுகா்வுக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com