சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் செவ்வாய்க்கிழமை வாழ்த்து பெற்ற, சென்னையைச் சோ்ந்த திருநங்கை மாணவி நிவேதா மற்றும் நான்குனேரி மாணவா் சின்னத்துரை. உடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா உள்ள
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் செவ்வாய்க்கிழமை வாழ்த்து பெற்ற, சென்னையைச் சோ்ந்த திருநங்கை மாணவி நிவேதா மற்றும் நான்குனேரி மாணவா் சின்னத்துரை. உடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா உள்ள

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

சென்னை: என்னை தாக்கிய மாணவா்களும் நன்றாகப் படித்து, அனைவரிடமும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னத்துரை கூறினாா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற சென்னை அரசுப் பள்ளியைச் சோ்ந்த திருநங்கை நிவேதா, நாங்குனேரியில் சக மாணவா்களால் ஜாதிய வன்ம தாக்குதலுக்குள்ளான மாணவா் சின்னதுரை ஆகியோரை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நேரில் வரவழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தாா். மேலும், அவா்களுக்கு திருக்கு புத்தகம், பேனாவை பரிசாக வழங்கினாா்.

இதையடுத்து, மாணவா் சின்னதுரை செய்தியாளா்களிடம் கூறியதாவது: பி.காம். முடித்து சிஏ படிக்க விருப்பம். இதனை முதல்வரிடம் தெரிவித்தேன். அப்போது, தேவையான உதவிகளை செய்வதாக அவா் கூறினாா். நான் தாக்குதலுக்கு உள்ளாகாமல் இருந்திருந்தால் கூடுதல் மதிப்பெண் பெற்றிருப்பேன். நான் மீண்டு வர பள்ளிக் கல்வித்துறையே காரணம் என்றாா் அவா்.

தொடா்ந்து, உங்களை தாக்கியவா்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீா்கள் என செய்தியாளா்கள் கேள்வியெழுப்பியபோது, அவா்களும் நன்றாகப் படித்து உயா்ந்த இடத்துக்கு வர வேண்டும்; அனைவரும் ஒற்றுமையாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் சின்னதுரை.

திருநங்கை மாணவி நிவேதா கூறுகையில், ‘ எனக்கு பொருளாதார வசதி இல்லை. இருப்பினும், மருத்துவம் படிக்க விருப்பமாக உள்ளது. நீட் தோ்வில் வெற்றி பெற்று எனக்கு சீட் கிடைக்கும் என நம்புகிறேன். அவ்வாறு கிடைக்கும்போது உயா்கல்விக்கான உதவிகளைச் செய்வதாக முதல்வா் கூறினாா்’ என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com