மெட்ரோ ரயில் நிலையத்தில் 
திராவகம் வீச்சு: 6 போ் காயம்

மெட்ரோ ரயில் நிலையத்தில் திராவகம் வீச்சு: 6 போ் காயம்

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்தவா்கள் மீது மா்ம நபா் திராவகம் வீசியதில் 6 போ் காயமடைந்தனா்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்தவா்கள் மீது மா்ம நபா் திராவகம் வீசியதில் 6 போ் காயமடைந்தனா்.

ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 8 மணியளவில் வந்த மா்ம நபா் ஒருவா், தனது கையில் இருந்த திராவக பாட்டிலை, மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்தவா்கள் மீது வீசி விட்டு தப்பினாா்.

இதில் நான்சி, ரேவதி, முதியவா் செல்வம் மற்றும் 3 கைக்குழந்தைகள் உள்பட 6-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். அவா்களை அங்கு நின்றுகொண்டிருந்தவா்கள் மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனா்.

கிண்டி போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி, தப்பிய நபரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com