பனை விசிறிக்கு "மவுசு'

திருத்தணியை அடுத்த வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தில், கோடையைச் சமாளிக்க பனை ஓலை விசிறி செய்யும் பணியில் 100-க்கும்
பனை விசிறிக்கு "மவுசு'

திருத்தணியை அடுத்த வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தில், கோடையைச் சமாளிக்க பனை ஓலை விசிறி செய்யும் பணியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 தமிழகம் முழுவதும் கோடை வெயில் கடுமையாக வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கோடை வெயில் ஒருபுறம் இருக்க, அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு மக்களை மேலும் சிரமப்படுத்துகிறது.
 இந்நிலையில் கோடைக்கு இதமான காற்று தரும் பனை ஓலை விசிறியின் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் கோடைக் காலத்துக்கு முன்னதாகவே பனை ஓலை விசிறி செய்யும் பணியில், திருத்தணி ஒன்றியம், சிறுகுமி ஊராட்சி, வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
 இதுகுறித்து வி.ஜி.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த அஞ்சேரி கூறியதாவது:
 சிறிய பனை மரத்தில் மட்டைகளை வெட்டி, 2 நாள்கள் படிய வைத்த பின், பனை ஓலை விசிறிகளைத் தயார் செய்கிறோம். ஆயிரம் விசிறிகள் செய்து, வண்ணம் பூச எங்களுக்கு ரூ. 1,200 செலவாகிறது. அவ்வாறு தயார் செய்கின்ற விசிறிகள், திருத்தணி, ஆர்.கே.பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் ரூ. 10-க்கு விற்கப்படுகின்றன. அதே திருவள்ளூர், சென்னை போன்ற பெருநகரங்களுக்குச் சென்று அங்கு கடைகளில் ரூ. 10 முதல் ரூ. 15 வரை விற்பனை செய்கிறோம்.
 தினசரி 100 விசிறிகள் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து இத்தொழிலைச் செய்து வருகிறாம். இத்தொழிலால் எங்களுக்கு ஜூலை மாதம் வரை பணத் தேவை ஓரளவு பூர்த்தியாகும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com