குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு, காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாமை, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி
குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கு, காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து சிறுவர்களுக்கு மருந்து வழங்கியமாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி.
குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கு, காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து சிறுவர்களுக்கு மருந்து வழங்கியமாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி.

திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாமை, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
முகாமில், ஆட்சியர் பேசியதாவது: இம்முகாம் வரும் ஜூலை ஒன்றாம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். இதில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயதுக்கு உள்பட்ட 2,22,708 குழந்தைகளுக்கு 1,426 அங்கன்வாடி பணியாளர்கள், இத்துறையைச் சார்ந்த 302 பணியாளர்கள் என மொத்தம் 1,728 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 1,808 அங்கன்வாடி மையங்களில், வயிற்றுப் போக்கை தடுக்கும் பொருட்டு ஓ.ஆர்.எஸ் உப்புக் கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகளை வழங்குவர்.
எனவே தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ் உப்புக்கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகளைக் கொடுத்து அவர்களுடைய ஆரோக்கியத்தினை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ஏ.தயாளன், பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜெ.பிரபாகரன், மருத்துவர்கள் சேகர், ஜெகதீஷ், விஜயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com