திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி தொடங்கப்பட்டு, இந்த அணிக்கு மாவட்டத் தொகுதி நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டனர். இதில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேடு பகுதியைச் சேர்ந்த அரவிந்தை (27) திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக ஆர்.கே.சரண்ராஜும், பொன்னேரி சட்டப்பேரவை தொகுதி ஒருங்கிணைப்பாளராக பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெ.பிரதாப்பும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.