புழல் மத்திய சிறையில்  ரயில் கொள்ளையர்களிடம் அடையாள அணிவகுப்பு

புழல் மத்திய சிறையில் சேலம்-சென்னை ரயில் கொள்ளையர்களிடம் அடையாள அணிவகுப்பு

புழல் மத்திய சிறையில் சேலம்-சென்னை ரயில் கொள்ளையர்களிடம் அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சி 2 நீதிபதிகள் முன்னிலையில்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்ட ரூ.5.78 கோடி பணம் சேலம் - சென்னை ரயிலில் கொள்ளையடிக்கப்பட்டது. 
இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறை ஓர் ஆண்டுக்கு மேல் நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கொள்ளைக் 
கும்பல் தலைவன் மோகர் சிங் உட்பட 7 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் அடையாள அணிவகுப்பு நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 
இதையடுத்து, நீதிபதிகள் சுப்ரஜா மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. 
அப்போது, 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 சாட்சிகள் மத்திய சிறையில் வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்த 7 ரயில் கொள்ளையர்களை அடையாளம் காட்டினர். அதன் பின்பு 7 கொள்ளையர்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com