தென்மண்டல சதுரங்க சாம்பியன் போட்டி இன்று தொடக்கம்

தென்மண்டல அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான சதுரங்க சாம்பியன் போட்டி ஆவடி வேல்டெக் பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 13) தொடங்கி,

தென்மண்டல அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான சதுரங்க சாம்பியன் போட்டி ஆவடி வேல்டெக் பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 13) தொடங்கி, தொடர்ந்து 3 நாள்களுக்கு நடைபெற உள்ளதாகவும், இதில், 73 பல்கலைக்கழக அணிகளைச் சேர்ந்த 482 மாணவ, மாணவிகள் பங்கேற்க இருப்பதாகவும் பல்கலைக்கழகத் தலைவர் சகுந்தலா ரங்கராஜன் தெரிவித்தார்.
 இது குறித்து வேல்டெக் ரங்கராஜன், டாக்டர் சகுந்தலா ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அறிவியல் மற்றும் தொழில் கழக வளாகத்தில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: விளையாட்டுத்துறையில் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இப்போட்டி இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் சார்பில் தென் மண்டல அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஆவடியில் சனிக்கிழமை (அக்டோபர் 13) தொடங்கி, தொடர்ந்து 16-ஆம் தேதி வரையில் 3 நாள்களுக்கு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே
 இப்பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் மாநில அளவில் 19 பதக்கங்களையும், தேசிய அளவில் 12 பதக்கங்களையும் பெற்றுள்ளனர். அதோடு, ரயில்வே, கப்பல் கழகம், காவல்துறை, விமானப்படையிலும் பணிக்குச் சேர்ந்துள்ளனர்.
 தற்போது, இப்பல்கலைக்கழகத்திற்கு மண்டல அளவிலான சதுரங்க போட்டி நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 73 பல்கலைக்கழகங்கள் பங்கேற்க இருக்கின்றன.
 இதில் 482 மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சியாளர்களும் பங்கேற்க இருக்கின்றனர். அதோடு இப்போட்டியை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் ஷீலா ஸ்டீபன் தொடங்கி வைக்க உள்ளார். இதைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளும் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். நிகழ்வில், பல்கலைக்கழக நிறுவனத் தலைவர் ஆர்.ரங்கராஜன், துணைவேந்தர் வி.ராமச்சந்திரன், பதிவாளர் இ.கண்ணன், இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பின் பார்வையாளரும், முன்னாள் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.எம்.மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com