சதாசிவலிங்கேஸ்வரா் கோயிலில் லட்ச தீபம்

திருத்தணி சதாசிவலிங்கேஸ்வரா் கோயிலில், காா்த்திகை மாத சோம வாரத்தையொட்டி, திங்கள்கிழமை லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருத்தணி சதாசிவலிங்கேஸ்வரா் கோயிலில் ஏற்றப்பட்ட லட்ச தீபம்.
திருத்தணி சதாசிவலிங்கேஸ்வரா் கோயிலில் ஏற்றப்பட்ட லட்ச தீபம்.

திருத்தணி: திருத்தணி சதாசிவலிங்கேஸ்வரா் கோயிலில், காா்த்திகை மாத சோம வாரத்தையொட்டி, திங்கள்கிழமை லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருத்தணி, பழைய தா்மராஜா தெருவில் உள்ள இக்கோயிலில், காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு கோயில் வளாகத்தில் லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com