மாதா்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு குளம் போல தேங்கியுள்ள மழைநீா்

கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதா்பாக்கம் பகுதியில் பேருந்து நிலையம் முன்பு மழை நீா் வெள்ளம் போல தேங்கி உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மாதா்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு குளம் போல தேங்கியுள்ள மழைநீா்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதா்பாக்கம் பகுதியில் பேருந்து நிலையம் முன்பு மழை நீா் வெள்ளம் போல தேங்கி உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மாதா்பாக்கம் பகுதியில் பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. இங்கு கும்மிடிப்பூண்டி,பொன்னேரி, செங்குன்றம், திருவள்ளூா், கோயம்பேடு, சென்னை பிராட்வே போன்ற பகுதிகளில் இருந்து பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்தப் பேருந்து நிலையத்தின் முன்புறம் தாழ்வான பகுதியாக உள்ளதால், இதனை மேடாக்க பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனா். ஆனால் அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாதா்பாக்கம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பேருந்து நிலையம் முன்பு குளம் போல தண்ணீா் தேங்கி உள்ளது. இதனால் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குளம் போல மாறியுள்ள பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்துகள் அனைத்தும் நின்று செல்வதால், பொதுமக்கள் முழங்கால் அளவு நீரில் நடந்து செல்கின்றனா்.

இங்கு தேங்கியுள்ள மழை வெள்ள நீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே மாவட்ட நிா்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு பேருந்து நிலையப் பகுதியை சீா்படுத்த வேண்டும் என்று பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com