4 இடங்களில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம்

கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், தேர்வழி, மேலக்கழனி,  ஓபசமுத்திரம், ஏனாதி மேல்பாக்கம்

கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், தேர்வழி, மேலக்கழனி,  ஓபசமுத்திரம், ஏனாதி மேல்பாக்கம் பகுதிகளில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற கூட்டங்களுக்கு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு, மாவட்ட நிர்வாகிகள் பகலவன், கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், ஒன்றிய நிர்வாகிகள் திருமலை, பாஸ்கரன், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலர் மணிபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த 4 ஊராட்சிகளில் நடைபெற்ற கூட்டங்களுக்கு, திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலர் கி.வேணு, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் ஆகியோர் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனர்.  தேர்வழியில் திமுக நிர்வாகி ரமேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில்,  மதுக்கடையை அகற்றுவது, தடையில்லா குடிநீர், மின்சார வசதி போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர். 
மேலக்கழனியில் திமுக நிர்வாகி கௌரிசங்கர் ஏற்பாட்டில், நடைபெற்ற கூட்டத்தில் அப்பகுதி அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி, அங்குள்ள விவசாயிகளின் வசதிக்காக கோயம்பேட்டுக்கு, பேருந்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். ஓபசமுத்திரத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவர் காளத்தி ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில், சாலை வசதி, நூறு நாள் வேலையை முறையாக வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை திமுகவினர் முன் வைத்தனர்.
ஏனாதி மேல்பாக்கத்தில் ஊராட்சி செயலர் குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில், தொகுப்பு வீடு வசதி, ஏரியைத் தூர் வாருவது உள்ளிட்ட கோரிக்கைகளை திமுகவினர் முன் வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com