தேவி கருமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் அமைந்துள்ள தேவி கருமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.


கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் அமைந்துள்ள தேவி கருமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி, முதல் கால வேள்வி, கணபதி வேள்வி, புனித தீர்த்தங்கள் சேகரிப்பு, புற்றுமண் எடுத்து வருதல், கல்வி பெருக கலைமகள் வழிபாடு, செல்வம் பெருக திருமகள் வழிபாடு, வீரம் பெருக மலைமகள் வழிபாடு, நிலம் செழிக்க  நீலபதி வழிபாடு, வாஸ்து வழிபாடு, பைரவர்  வழிபாடு ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன.
இதையடுத்து, எண்திசை பாலகர் வழிபாடு, முளைப்பாரி வழிபாடு, சூரிய சந்திர வழிபாடு, திசைக்காவலர் வழிபாடு, மலர் அர்ச்சனை வழிபாடு, மூலிகை வேள்வி, பழங்கள், பலகாரங்கள், அன்னங்கள், பால், தயிர், நெய், இளநீர், பன்னீர், தேனுடன் அபிஷேகங்கள், மங்கல ஆராதனை, திருநீறு வழங்குதல் ஆகியவை நடைபெற்றன.
தொடர்ந்து இரண்டாம் கால வேள்வி, சிவகணநாதர் வழிபாடு, சூரிய சந்திர வழிபாடு, திசைக்காவலர் வழிபாடு, மங்கல ஆராதனை, வளம் பெற வேண்டல், திருமுறை விண்ணப்பம், திருநீறு வழங்குதல், அஷ்டபந்தனம் சாற்றுதல், காப்புக் கட்டுதல், மூன்றாம் கால வேள்வி ஆகியவை நடைபெற்றன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை  அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி, திரவிய வேள்வி, மகா ஆகுதி நிறைவு, நாடி சந்தானம், பரிவார மூர்த்தி ஆலயத்துக்குள் எழுந்தருளல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. 
இதைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய கும்பக் கலசங்கள் கோயிலைச் சுற்றி கொண்டு வரப்பட்டன. 
பின்னர், இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன் தலைமையில், கோயிலில் உள்ள 7 கோபுரக் கலசங்கள் மீது கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் வார்த்து, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
விழாவில் முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் புதுகும்மிடிப்பூண்டி செல்வராஜ், கீழ்முதலம்பேடு திருமலை, அதிமுக நகர செயலர் மு.க.சேகர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com