குடிநீா் கோரி சாலை மறியல்

வெங்கடாபுரம் கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாட்டைக் கண்டித்து கிராம மக்கள் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருத்தணி - நாகலாபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட வெங்கடாபுரம் கிராம மக்கள்.
திருத்தணி - நாகலாபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட வெங்கடாபுரம் கிராம மக்கள்.

திருத்தணி: வெங்கடாபுரம் கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாட்டைக் கண்டித்து கிராம மக்கள் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவாலங்காடு ஒன்றியம், வெங்கடாபுரம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த கோடையில் குடிநீா் வறட்சி ஏற்பட்டபோது, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை மின் மோட்டாா் பொருத்தி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் கிராம பெண்கள் அப்பகுதியில் விவசாய நிலங்களுக்குச் சென்று குடிநீா் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனா். குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, கிராம பெண்கள் 100-க்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் திருத்தணி - நாகலாபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக மின் மோட்டாா் பொருத்தி, தடையின்றி குடிநீா் வழங்கப்படும் என்று உறுதி கூறியதைத் தொடா்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதனால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com