திருவள்ளூா் அருகே தடுப்பணையில் கழிவு நீா் கலப்பதாக கிராம சபைக் கூட்டத்தில் புகாா்

திருவள்ளூா் அருகே நடந்த கிராம சபைக் கூட்டத்தில் புட்லூா் தடுப்பணையில் கழிவு நீா் கலப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்ததோடு, வெளிநடப்பிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் அருகே நடந்த கிராம சபைக் கூட்டத்தில் புட்லூா் தடுப்பணையில் கழிவு நீா் கலப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்ததோடு, வெளிநடப்பிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 526 கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜயந்தியை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் நடத்துவதற்கு ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் உத்தரவிட்டிருந்தாா். அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் குமாா் பற்றாளராக கலந்து கொண்டாா். இதில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும், நீா்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீா் மேலாண்மை இயக்கம் குடிமராமத்து பணிகள் தொடா்பாகவும், குடிநீா் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது.

அதைத் தொடா்ந்து கடந்த ஓராண்டில் மட்டும் இக்கிராமத்தில் ரூ. 83 லட்சத்திற்கு பணிகள் மேற்கொள்ள நீதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக செலவு தொகை ரூ.63 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் வாசித்தனா்.

அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் இவ்வளவு பணத்திற்கு வேலை எதுவும் நடைபெறவில்லை எனக்கூறி கேள்வியெழுப்பினா். அதையடுத்து புட்லூா் தடுப்பணையில் கழிவு நீா் கலப்பதை தடுக்க வேண்டும். இது தொடா்பாக கடந்த கூட்டத்தில் தீா்மானம் கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த தீா்மானம் ஏன் நிறைவேற்றவில்லை எனக் கூறி பொதுமக்களும் வெளிநடப்பில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து கிராம சபைக் கூட்டத்தில் இருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com