திருத்தணி: ராஜகோபுர படிகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்

திருத்தணி முருகன் கோயிலில் நிறுத்தப்பட்ட ராஜகோபுர படிகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கி, வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்படும் என புதிதாகப் பொறுப்பேற்ற கோயில் இணை ஆணையர் பழனிகுமார்
திருத்தணி: ராஜகோபுர படிகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்


திருத்தணி முருகன் கோயிலில் நிறுத்தப்பட்ட ராஜகோபுர படிகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கி, வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்படும் என புதிதாகப் பொறுப்பேற்ற கோயில் இணை ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.
 திருத்தணி முருகன் கோயிலில், ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் 123 அடி உயரத்துக்கு ராஜகோபுரம் கட்டும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. தொடர்ந்து, ராஜகோபுரத்தில் இருந்து மாடவீதிக்கு புதிதாக படிகள் அமைக்கும் பணி பல்வேறு காரணங்களால் தொடங்க முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
  இந்நிலையில், செவ்வாய்க்கிழமை திருத்தணி முருகன் கோயிலின் புதிய இணை ஆணையராகப் பொறுப்பேற்ற பழனிகுமார், கோயில் தக்கார் வே.ஜெயசங்கர், கோயில் இளநிலைப் பொறியாளர் வேல்முருகன் ஆகியோர் மலைக்கோயிலுக்குச் சென்றனர். பின்னர், பணிகள் நிறுத்தப்பட்ட ராஜகோபுரத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
  இதைத் தொடர்ந்து கோயில் இணை ஆணையர் பழனிகுமார் கூறுகையில், ராஜகோபுரத்தில் இருந்து மாடவீதிக்கு படிகள் அமைப்பதற்குத் திட்ட மதிப்பீடு தயார் செய்து, இந்து அறநிலையத் துறை ஆணையர் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் படிகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கி, 3 மாதங்களில் முடிக்கப்படும். அதாவது வரும் ஜனவரி மாதத்துக்குள் படிகள் அமைத்து, குடமுழுக்கு விழா பணிகள் தொடங்கப்படும். அதே போல் மலைக்கோயிலில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டியுள்ள நவீன முடி காணிக்கை மண்டபத்துக்கு கழிப்பறை தொட்டி கட்டும் பணி மட்டும் கிடப்பில் உள்ளது. இப்பணிகள், இம்மாதத்துக்குள் கட்டி முடித்து விரைந்து ஆணையரின் அனுமதி பெற்று, பக்தர்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com