தபால் வாக்கு செலுத்திய காவல் துறையினர்

மக்களவைத் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள காவல் துறையைச் சேர்ந்தவர்கள், திருவள்ளூர் கலவல கண்ணன் செட்டி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை தபால் வாக்குகளை செலுத்தினர். 


மக்களவைத் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள காவல் துறையைச் சேர்ந்தவர்கள், திருவள்ளூர் கலவல கண்ணன் செட்டி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை தபால் வாக்குகளை செலுத்தினர். 
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியுடன், பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அரசுத் துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல் துறை பணியாளர்கள் என மொத்தம் 19 ஆயிரம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். ஏற்கெனவே, வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாமிலேயே அஞ்சல் வாக்குகள் செலுத்துவதற்கான படிவங்கள் வழங்கப்பட்டு, தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றும் மற்ற தொகுதிகளைச் சேர்ந்த காவல் துறைப் பணியாளர்களுக்கு ஏற்கெனவே தபால் வாக்குப் படிவங்கள் அவரவர் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதேபோல், திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட காவல் துறைப் பணியாளர்கள் மொத்தம் 550 பேருக்கு தபால் வாக்குப் படிவம் வழங்கப்பட்டிருந்தது.
இவர்களுக்காக திருவள்ளூர் பேருந்து நிலைய ஏரிக்கரைச் சாலையில் உள்ள கலவல கண்ணன் செட்டி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும், தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மையத்தில் காவல் துறையினர் தங்கள் தபால் வாக்குகளைப் பூர்த்தி செய்து, அதற்கான வாக்குப் பெட்டியில் செலுத்தினர்.
இதில், பிற்பகல் 2 மணி வரை 300 காவல் துறைப் பணியாளர்கள் தபால் வாக்குகளை அளித்திருந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com