கும்மிடிப்பூண்டியில் அதிமுக எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.வேணுகோபாலை ஆதரித்து கும்மிடிப்பூண்டி

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.வேணுகோபாலை ஆதரித்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தலைமையில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்விற்கு பாமக மாநில துணை பொதுச் செயலாளர் மா.செல்வராஜ், தமாகா மாவட்டத் தலைவர் எஸ்.சேகர், மாநில நிர்வாகி டி.கே.மாரிமுத்து, தேமுதிக தொகுதிப் பொறுப்பாளர் எஸ்.பி.டி.ராஜேந்திரன், பாஜக நிர்வாகி வேந்தன், அதிமுக நிர்வாகிகள் மு.க.சேகர், எஸ்.டி.டி.ரவி, ராஜேந்திரன், கோவிந்தராஜன், இமயம் மனோஜ், லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அவர்கள் கும்மிடிப்பூண்டி அதிமுக அலுவலகத்தில் இருந்து பிரசாரம் தொடங்கி, கும்மிடிப்பூண்டி வசந்த பஜார் வழியே, ரயில்வே ஸ்டேஷன் சாலை, காட்டுக் கொல்லை தெரு , ஜிஎன்டி சாலை , ரெட்டம்பேடு சாலை சந்திப்பு வரை சென்று நகர பேருந்து நிலையம் வழியாக மீண்டும் அதிமுக தேர்தல் அலுவலகத்தை வந்தடைந்தனர்.
பிரசாரத்தின்போது பொதுமக்கள், கடைக்காரர்களிடம் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். இந்தப் பிரசாரத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பூவலம்பேடு, வாணியமல்லி, திடீர் நகர் பகுதிகளில் அதிமுக மகளிர் அணி ஒன்றியத் தலைவர் லோகாம்பாள் கருணாகரன் தலைமையில் அதிமுக மகளிர் அணியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நொச்சிக்குப்பம், பாட்டைக்குப்பம், பெத்தானியா குப்பம், வெங்கடேசப் பெருமாள்நகர் குப்பம் ஆகிய பகுதிகளில் அக்கட்சியின் மாநில மீனவர் அணி துணைத் தலைவர் ஜெ.சுரேஷ் தலைமையிலும், எகுமதுரை, அப்பையன்பாளையத்தில் அதிமுக பாசறை நிர்வாகி டி.சி.மகேந்திரன் தலைமையிலும் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.
பல்லவாடாவில் அதிமுக மாவட்ட மாணவர் அணி நிர்வாகி ரமேஷ்குமார், பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் அதிமுகவினர் பல்லவாடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com