மக்கள் குறைதீர் முகாம்

பொன்னேரி வட்டத்தில் உள்ள ஆலாடு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

பொன்னேரி வட்டத்தில் உள்ள ஆலாடு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
முகாமுக்கு, பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார்.  கோட்டாட்சியர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் எட்வர்ட் வில்சன் வரவேற்றார். 
கடந்த 2 நாள்களாக பொன்னேரி வட்டத்தில் உள்ள 58 வருவாய்க் கிராமங்களில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடம் இருந்து 1,906 மனுக்கள் பெறப்பட்டதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.  இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, பரிசீலனைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டையில்...
 ஊத்துக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட14 கிராமங்களுக்கு 2-ஆம் கட்டமாக மக்கள் குறைதீர் முகாம் பனப்பாக்கம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அக்கரபாக்கம், மதுரவாசல், பனையஞ்சேரி,  மஞ்சங்காரனை, கோட்டகுப்பம், ஆமிதாநல்லூர், தொலவேடு, சென்னங்காரணி உள்ளிட்ட 14 கிராமங்களுக்கு நடைபெற்ற முகாமில், திருமண உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை , மின்சாரம், தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 359 மனுக்கள் பெறப்பட்டன. 
ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் செல்வகுமார் மனுக்களைப் பெற்றுக்கொண்டார். இந்த மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com