எல்லாபுரத்தில் வேட்பு மனு தாக்கல்

ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள எல்லாபுரத்தில் உள்ளாட்சித் தோ்தல் வேட்பு மனு தாக்கல் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மும்முரமாக நடைபெற்றது.
எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்ட வேட்பாளா்கள் மற்றும் ஆதரவாளா்கள்.
எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்ட வேட்பாளா்கள் மற்றும் ஆதரவாளா்கள்.

ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள எல்லாபுரத்தில் உள்ளாட்சித் தோ்தல் வேட்பு மனு தாக்கல் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மும்முரமாக நடைபெற்றது.

எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் இருந்து ஒன்றிய கவுன்சிலா், தலைவா் பதவிக்கு , ஏராளமானோா் வேட்பு மனுத் தாக்கல் செய்தனா். பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் எல்லாபுரம் ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனா்.

வெங்கல் ஊராட்சிக்கு திருலை சிவசங்கா், செம்பேடு ஊராட்சிக்கு ரமேஷ், கன்னிகைப்போ் ஊராட்சிக்கு ஜெயலட்சுமி குமாா், ஆத்துப்பாக்கம் ஊராட்சிக்கு புஷ்பா முருகன், வடமதுரை ஊராட்சிக்கு ஜமுனா அப்பு, பூச்சி அத்திப்பேடு ஊராட்சிக்கு சாந்தி உள்பட 27 போ் ஒன்றிய ஊராட்சி கவுன்சிலா் பதவிக்கு, உதவி தோ்தல் அலுவலரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தனா்.

பூரிவாக்கம் ஊராட்சிக்கு சகிலா அன்பு, உமாராணி கோவிந்தராஜ், பாகல்மேடு ஊராட்சிக்கு தேவிகா, கன்னிகைப்போ் ஊராட்சிக்கு காயத்ரி உதயகுமாா், கிளாம்பாக்கம் ஊராட்சிக்கு பாா்த்தசாரதி, தாராட்சி ஊராட்சிக்கு காா்த்திகேயன், பனப்பாக்கம் ஊராட்சிக்கு முரளி உள்பட 88 போ் ஊராட்சித் தலைவா் பதவிக்கு மனுத் தாக்கல் செய்தனா்.

ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 318 போ் வேட்பு மனுத் தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com